search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமூக ஆர்வலர்"

    உடல்சோர்வு காரணமாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. #AnnaHazare #Hospitalised
    அகமதுநகர்:

    சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மராட்டிய மாநிலம் அகமதுநகர் மாவட்டம் ராலேகான் சித்தி கிராமத்தில் வசித்துவருகிறார். மத்தியில் லோக்பால், மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைக்க வலியுறுத்தி ஒரு வாரம் உண்ணாவிரதம் இருந்த அவர் கடந்த 5-ந்தேதி தான் உண்ணாவிரதத்தை கைவிட்டார். அப்போது அவரது உடல் எடை 5 கிலோ வரை குறைந்துவிட்டது.

    இந்நிலையில் நேற்று அவருக்கு உடல்சோர்வு ஏற்பட்டது. அவரை அகமதுநகரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்ததில் அவரது மூளைக்கு ரத்தம் செல்வதில் குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவருக்கு உடல்சோர்வு மற்றும் சில பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  #AnnaHazare #Hospitalised 
    வாக்குறுதியை இன்னும் சில நாட்களில் நிறைவேற்ற தவறினால் எனக்கு வழங்கப்பட்ட பத்மபூ‌ஷன் விருதை திருப்பி அனுப்புவேன் என்று அன்னா ஹசாரே மிரட்டல் விடுத்துள்ளார். #AnnaHazare #bjp #PadmaBhushanaward

    மும்பை:

    சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மராட்டிய மாநிலம் அகமத் நகரில் உள்ள தனது சொந்த கிராமமான ரலேக்கான் சித்தியில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

    லோக்பால், லோக் ஆயுக்தாவுக்கு நீதிபதிகள் நியமிக்க கோரியும், மராட்டிய மாநிலத்தில் விவசாயிகள் பிரச்சினையை தீர்க்க கோரியும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

    போராட்டத்தின் போது அன்னா ஹசாரே பேசியதாவது:-

    எனது உயிருக்கு எதுவும் நடந்தால் அதற்கு பிரதமர் மோடி தான் பொறுப்பு. மோடி அரசு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து இருந்தது. அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

    இன்னும் சில நாட்களில் இதை நிறைவேற்ற தவறினால் எனக்கு வழங்கப்பட்ட பத்மபூ‌ஷன் விருதை திருப்பி அனுப்புவேன்.

    நான் விருதுக்காக பணியாற்றுபவன் அல்ல. நாட்டுக்காகவும் நாட்டு நலனுக்காகவும் பணியாற்றுவதற்காக எனக்கு இந்த விருது கொடுக்கப்பட்டது. மோடி அரசு மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது.


    இவ்வாறு அவர் பேசினார்.

    அன்னா ஹசாரே போராட்டத்துக்கு சிவசேனா ஆதரவு தெரிவித்துள்ளது. #AnnaHazare #bjp #PadmaBhushanaward 

    சவுதி அரேபியாவில் சமூக வலைத்தளத்தில் தவறான தகவல்களை பதிவிட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அபுதாபி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. #AhmedMansoor #UAEactivist

    அபுதாபி:

    ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் அகமது மன்சூர். இவர் சமூக வலைத்தளத்தில் ஐக்கிய அரபு அமீரக அரசு மற்றும் அரசியல் தலைவர்கள் குறித்து தவறான மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான தகவல்களை பரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

    இது தொடர்பான வழக்கை அபுதாபி நீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது மன்சூர் தனது தவறான பதிவுகளின் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தின் கவுரவத்தையும், அரசியல் தலைவர்களையும் இழிவுபடுத்தி விட்டதாக நீதிமன்றம் கூறியது. 

    இதையடுத்து, அகமது மன்சூருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அபுதாபி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் மன்சூருக்கு ரூ.1.83 கோடி (1 மில்லியன் திர்ஹாம்) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. #AhmedMansoor #UAEactivist
    ×